மதுரையில் முதல்வர் ஸ்டாலின் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்
மதுரை, 30 அக்டோபர் (ஹி.ச.) தென்காசியில் நேற்று (அக் 29) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்றிரவு மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்க வந்தார். முத்துராமலிங்கத் தேவரின், 118-வது ஜெயந்தி மற்றும் 63-ம் ஆண்டு குர
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்


மதுரை, 30 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசியில் நேற்று

(அக் 29) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்றிரவு மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்க வந்தார்.

முத்துராமலிங்கத் தேவரின், 118-வது ஜெயந்தி மற்றும் 63-ம் ஆண்டு குருபூஜையையொட்டி இன்று (அக் 30) காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மருது பாண்டியர்களின் 224வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவர் குருபூஜையையொட்டி மதுரை மாநகரில் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல, இன்று மதுரையிலிருந்து காரில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.

Hindusthan Samachar / vidya.b