தேர்தல் சின்னம் கேட்டு 6-ந் தேதி விண்ணப்பிக்க தவெக திட்டம்
சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் ஆளும் திமுக உள்ளிட்ட அணைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. அந்த வகையில், நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் த.வெ.க.வுக்கு தேர்
தேர்தல் சின்னம் கேட்டு 6-ந் தேதி விண்ணப்பிக்க  தவெக திட்டம்


சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் ஆளும் திமுக உள்ளிட்ட அணைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.

அந்த வகையில், நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் கேட்டு அவர் நவம்பர் 6 அல்லது 11-ந்தேதி தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக விசில், பேட், உலக உருண்டை உள்ளிட்ட 5 சின்னங்களை அக்கட்சி தேர்வு செய்து வைத்துள்ளது.அந்த 5 சின்னங்களில் தேர்தல் ஆணையம் எதை ஒதுக்கினாலும், அதனை பெற்று தேர்தலை சந்திக்க த.வெ.க. திட்டமிட்டு உள்ளது.

இதற்காக விண்ணப்பத்தை முறையாக த.வெ.க. பூர்த்தி செய்ய இருக்கிறது. நவம்பர் 6 அல்லது 11-ந்தேதி த.வெ.க. முக்கிய நிர்வாகிகள் டெல்லிக்கு சென்று முறையாக விண்ணப்பிக்க இருக்கிறார்கள்.

நவம்பரில் விஜய் தேர்தல் ஆணையத்தில் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவருக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் அவருக்கு சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அதனைத்தொடர்ந்து 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை விஜய் முன்னெடுக்க இருக்கிறார்.

Hindusthan Samachar / vidya.b