Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)
முத்துராமலிங்கத் தேவரின் 118 பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில்,
தேவர் உயிருடன் இருந்து இருந்தால் பாஜகவுக்கு ஆதரவு கிடைத்து இருக்கும். முதலமைச்சர் உட்பட இந்துக்கள் என்றால் வேறுபடுத்தி பார்க்கப்படுகிறார்கள். இதை தவிக்க வேண்டும்.
சி பி ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் வாழ்த்தி இருப்பதை வரவேற்கிறேன். அதே நேரத்தில், சி பி ஆர் துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுகவின் பங்கு என்ன என்பதை அவரின் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும். நவீன் பட்நாயக்குக்கு இருந்த பெருந்தன்மை முதலமைச்சருக்கு இல்லை.
திமுகவின் அமைச்சர் நேரு நேர்மை இல்லாமல் இருக்கிறார். நேரு நேர்மை இல்லாமல் நடந்துகொண்டு இருக்கிறார். இதுவரை 7,8 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. சதுப்பு நில காடுகள் விவகாரத்தில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இதற்கு எல்லாம் பொறுப்பேற்று திமுக அரசு பதில் சொல்ல வேண்டும், இல்லை என்றால் பதவி விலக வேண்டும் மதுரை மாநகராட்சி முதல் குடிநீர் வழங்கல் துறை வரை எல்லாவற்றிலும் ஊழல். பாட்டிலுக்கு 10 ரூபாய் பதவிக்கு பல லட்சம் ரூபாய்
வாக்காளர் சீராய்வை சீரழிவு போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வாக்குரிமை மறுக்கப்படுகிறது என்று முதலமைச்சர் கூறுகிறார்
முறைகேடாகத்தான் திமுக வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறது. SIR வந்தால் முறைகேடுகள் நீக்கப்படும் என்பதால் பதற்றத்துடன் இருக்கிறார்கள். SIR நடைமுறைப்படுத்தினால்தான் தேர்தல் முறையாக நடக்கும்.
விஜய் பற்றிய கேள்விக்கு, கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவு படுத்துவோம் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
திமுகவை தோற்கடிப்பதில் எல்லாருக்கும் பங்கு உள்ளது. விஜய்க்கும் பங்கு உள்ளது. SIR என்பது சிஸ்டம்,கிளீன் செய்வது திமுகவுக்கு பிடிக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ