கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
கோவை, 30 அக்டோபர் (ஹி.ச.) பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் அனைத்து வார்டு பகுதிகளிலும் குண்டும் குழியுமான சாலைகளை சீர்படுத்தக்கோரி பழுதடைந்த சாக்கடைகளை சரிப்படுத்தக்கோரி பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்
The Communist Party of India (Marxist) staged a protest condemning the Periyanayakanpalayam Town Panchayat administration in Coimbatore.


கோவை, 30 அக்டோபர் (ஹி.ச.)

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் அனைத்து வார்டு பகுதிகளிலும் குண்டும் குழியுமான சாலைகளை சீர்படுத்தக்கோரி பழுதடைந்த சாக்கடைகளை சரிப்படுத்தக்கோரி பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் ரோட்டையும் ஜடல்நாயுடு வீதியையும் இணைக்கும் பழுதடைந்த தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக அமைத்துத்தர வேண்டும். பிரதான சாலைகளில் தேக்கிவைக்கும் குப்பைகளை அவை சேகரிக்கப்படும்போதே வண்டிகளின் மூலமாக நகருக்கு வெளியே கடத்தி நவீன முறைகளில் அவற்றை அழிக்கக்க வேண்டும். மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள உயர்மட்ட மேம்பாலத்தை சீர்படுத்தி சர்வீஸ் ரோடுகளை விரிவாக்கி பொது போக்குவரத்தை சரிப்படுத்த மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள மதுபானக்கடைகளை அப்புறப்படுத்தி சாலையோரக் கடைகளை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாவண்ணம் சாலையோர வியாபார வளாகங்களை உருவாக்கி எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

பெரியநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலை பள்ளி. அரசு மருத்துவ மனை மேம்பாடு. மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள வார்டு பகுதிகளின் சாலைகளை சீராக்கி பெயர் பலகைகள்வைத்தல். விளையாட்டு மைதானங்கள். சிறுவர் பூங்காக்கள். ரேசன் கடைகள். சமுதாய கூடங்களை உருவாக்கி பேரூராட்சியின் உள் கட்டமைப்பை மேம்படுத்த கோரி மக்கள் கோரிக்கை ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு பேரூராட்சி மன்ற உறுப்பினர் என். சிவராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம். கோகுலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன் ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.

மக்கள் கோரிக்கை ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட திரளான பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கு பெற்றனர்.

நிறைவாக ஜடல்நாயுடுவீதி கிளை செயலாளர் ஆர். கருப்புசாமி நன்றி கூறினார்.

Hindusthan Samachar / V.srini Vasan