யுகேஜி பள்ளி மாணவி தேவர் வேடமிட்டு மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது
மதுரை, 30 அக்டோபர் (ஹி.ச.) தேவர் ஜெயந்தி முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்படு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும
Lkg student


மதுரை, 30 அக்டோபர் (ஹி.ச.)

தேவர் ஜெயந்தி முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்படு வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ முழு வெண்கல சிலைகளுக்கு உசிலம்பட்டி சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உசிலம்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஷ்மிகா என்ற யுகேஜி மாணவி தேவர் வேடம் அணிந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / Durai.J