Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 30 அக்டோபர் (ஹி.ச.)
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அக்கட்சி நிர்வாகிகள் இன்று காலை (அக் 30) மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக் 30) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் காஞ்சிபுரம் மாவட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.
சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b