Enter your Email Address to subscribe to our newsletters

மெல்போர்ன், 31 அக்டோபர் (ஹி.ச.)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் ரத்தானது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
மெல்போர்ன் மைதானத்தில் இதுவரை 6 டி20 போட்டியில் ஆடி இருக்கும் இந்திய அணி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.
கடந்த ஆட்டத்தை போல் மெல்போர்னிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM