Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் இன்று (அக் 31) 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு:
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் செயலாளராக இருந்த கண்ணன் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக இருந்த அம்ரித், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக நியமனம்.
தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பொது மேலாளராக இருந்த கவிதா, பால் கூட்டுறவு இணைய இணை மேலாண் இயக்குனர் ஆக நியமனம்.
தமிழக பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இணை இயக்குநர் ஆக இருந்த முத்துக்குமரன், பேரிடர் மேலாண்மை முகமை இயக்குனர் ஆக நியமனம்.
தமிழக மாநில தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பொது மேலாளர் ஆக இருந்த, லீலா அலெக்ஸ், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலர் ஆக நியமனம்.
ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்தின் ஆணையராக இருந்த டாக்டர் மு.வீரப்பன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆக நியமனம்.
தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஆக இருந்த ரேவதி, உயர்கல்வித்துறை துணை செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b