Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 31 அக்டோபர் (ஹி.ச.)
கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மருத்துவ ஆய்வு படிப்பிற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 100 ஊழியர்கள் தங்கள் இறப்பிற்கு பிறகு உடல் தானம் செய்யும் நிகழ்ச்சி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது.
இதில்உடல் தானம் செய்யும் நிகழ்வில் கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். பி.ஆர்.நடராஜன், கட்சியின் மூத்த தோழர்கள் 60 பேரும், பெண்கள் 15 பேரும், இளம் நிர்வாகிகள் 25 பேரும் என 100 பேர்கள் உடல்தானம் செய்யக்கூடிய சட்ட ரீதியான ஒப்புதல் படிவங்களை அரசு மருத்துவமனையின் முதல்வர் கீதாஞ்சலியிடம் ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற்றது.
Hindusthan Samachar / V.srini Vasan