Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 31 அக்டோபர் (ஹி.ச.)
திருநெல்வேலி பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதராக திகழ்கிறார்.
ஓபிஎஸ், டிடிவி மற்றும் செங்கோட்டையன் மூவரும் சேர்ந்து பசும்பொன் சென்றார்கள். இது யாருக்கு பலம் யாருக்கு பலவீனம் என்பது அவர்கள் விடும் அறிக்கையை பொறுத்துதான் தெரியும்.
இப்போது அவர்களைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுகவை பொறுத்தவரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறிய கருத்தை வைத்து தமிழ்நாட்டு அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக நீங்கள் கேட்பது முற்றிலும் தவறு. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் பீகாரிகளை பற்றி பேசியதை தான் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். முதலமைச்சர் தான் வந்தேறிகள் என பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் தான் பிரிவினை தூண்டும் விதமாக பேசுகிறார் எனவே முதலமைச்சர் வட மாநிலம் தென் மாநிலம் என பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட வேண்டாம். முதலமைச்சருக்கு தோல்வி பயம் வந்துள்ளது ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் பொய்யே பேசி வருகிறார் இந்த ஆட்சி பொய் சொல்லும் ஆட்சியாக உள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்
கரூர் விவகாரத்தை பொறுத்தவரை இந்த ஆட்சி பழிவாங்கும் ஆட்சி ஆளுங்கட்சி ஒரு மீட்டிங் நடத்த வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் பள்ளிகளை மூடி கூட அவர்கள் நிகழ்ச்சி நடத்துவார்கள் என்றார்.
தொடர்ந்து தவெகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்பது குறித்து கேள்விக்கு, கூட்டணியை பொறுத்தவரை தேர்தல் காலங்களில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் அரசியலில் நிரந்தர நண்பர்களும் நிரந்தர பகைவர்கள் இல்லை நாங்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
தென்காசி மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஆயிரம் கோடிக்கு கொண்டு வந்த திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்றுவிடும் என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN