ரூ.3,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.) பிணையப் பத்திரம் என்பது, முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் அல்லது அரசுகளுக்குக் கடன் வழங்குவதன் மூலம், அவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் ஒரு ஆவணம். இந்த பிணைப்பத்திரங்களை வாங்குவதன் மூலம், கடனைப் பெற்றவர் ஆண்டுதோறும் முதலீட்
வரும் 4-ந்தேதி ரூ.3,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)

பிணையப் பத்திரம் என்பது, முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் அல்லது அரசுகளுக்குக் கடன் வழங்குவதன் மூலம், அவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் ஒரு ஆவணம்.

இந்த பிணைப்பத்திரங்களை வாங்குவதன் மூலம், கடனைப் பெற்றவர் ஆண்டுதோறும் முதலீட்டாளர்களுக்கு வட்டி செலுத்துவார்.

நிறுவனங்களும், அரசுகளும் தங்களின் திட்டங்களுக்குப் பெரும் தொகையைக் கடனாகப் பெறுவதற்காக பிணைப்பத்திரங்களை வெளியிடுகின்றன.

முதலீட்டாளர்கள் இந்தப் பிணைப்பத்திரங்களை வாங்கி, வெளியிட்ட நிறுவனங்களுக்கு அல்லது அரசுக்குக் கடன் வழங்குகிறார்கள். இந்த முதலீட்டாளர்களுக்கு, அவர்கள் வழங்கிய கடனுக்கான வட்டி, ஆண்டுதோறும் பிணைப்பத்திரத்தின் மூலம் வழங்கப்படும்.

இதன் மூலம், நிறுவனங்களுக்கும் அரசுக்கும் நிதி உதவி கிடைக்கிறது. மேலும், முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான முதலீடாக அமைகிறது.

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் வரும்

4-ந் தேதி ரூ.3,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 3000 கோடி மதிப்பில் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1000 கோடி மற்றும் 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 2000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் நவம்பர் 04, 2025 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) நவம்பர் 04, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM