பொள்ளாச்சி மற்றும் திருச்செங்கோடு திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டு வருகிறார்.
பொள்ளாச்சி மற்றும் திருச்செங்கோடு திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை


சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டு வருகிறார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை கழக செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தனித்தனியே சந்தித்து வருகிறார்.

இந்த சந்திப்பின் போது பொதுமக்களுக்கு அரசின் சாதனை திட்டங்கள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது? தொகுதிகளின் செயல்பாடுகள் என்ன? தொகுதி வாரியாக தேர்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது? என்பது குறித்து நிர்வாகிகளுடன் முதல்வர் கேட்டறிந்து வருகிறார்.

அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலையத்தில் பொள்ளாச்சி மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி திமுக கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று

(அக் 31) ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் 31 நாட்களில் 69 சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b