பராமரிப்பு பணி காரணமாக வைகை விரைவு ரெயில் உள்ளிட்ட ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.) சென்னை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு : வருகிற நவம்பர் 15-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து கா்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் செல்லும் எக்ஸ
பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட வைகை விரைவு ரெயில் உள்ளிட்ட ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு :

வருகிற நவம்பர் 15-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து கா்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12292), இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு (25 நிமிடம் தாமதம்) செல்லும்.

சென்னை எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடமும், சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 3,5,8,12,13,15 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வழக்கமான நேரத்தைவிட 30 நிமிடமும் தாமதமாக மதுரை சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்த வருகிற நவம்பர் 8,15 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16354), வழக்கமான நேரத்தைவிட 3 மணி நேரம் தாமதமாக காச்சிகுடா சென்றடையும்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து வருகிற நவம்பர் 12-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (12839), வழக்கமான நேரத்தைவிட 55 நிமிடம் தாமதமாக சென்டிரல் வந்தடையும்.

அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து வருகிற நவம்பர் 11-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12516), வழக்கமான நேரத்தைவிட 50 நிமிடம் தாமதமாக கோவை வந்தடையும்.

சண்டிகாரில் இருந்து வருகிற நவம்பர் 5-ந்தேதி காலை 8.05 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20494), வழக்கமான நேரத்தைவிட 40 நிமிடம் தாமதமாக மதுரை வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b