மணல் கொள்ளை தொடர்பாக அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட கோரி எப்படி வழக்கு தொடர முடியும் – உயர்நீதிமன்றம்
சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.) மணல் கொள்ளை தொடர்பாக அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட கோரி எப்படி வழக்கு தொடர முடியும் என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு பதிவு செய்யக
High


சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)

மணல் கொள்ளை தொடர்பாக அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட கோரி எப்படி வழக்கு தொடர முடியும் என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கு பதிவு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமலாக்க துறை நீதிமன்றத்தில் பதில் தெரிவித்தது.

தகவல்களை அனுப்பி வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கூறினால் அதை ஏற்றுக்கொள்ள மாநில காவல்துறை போஸ்ட் மாஸ்டர் அல்ல என தமிழக அரசு தெரிவித்தது

உத்தரபிரதேசம் பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் தமிழகத்தை விட நான்கு மடங்கு அதிக மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு மட்டுமே அமலாக்க துறையின் கண்களுக்கு தெரிகிறது என தமிழக அரசு மீண்டும் பதில் தெரிவித்தது

ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு தொடர்பாக டிஜிபி-க்கு ஆதாரங்கள் அளித்துள்ளோம் என அமலாக்க துறை அந்த வாதத்திற்கு பதிலளித்தது.

அமலாக்கத் துறை மனுவுக்கு 3 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ