Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 31 அக்டோபர் (ஹி.ச.)
கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவையில் இருந்து தினமும் சிங்கப்பூர், அபுதாபி, சார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும் சென்னை, ஐதராபாத், மும்பை, டெல்லி, பெங்களூர், புனே, கோவா, அகமதாபாத் உள்ளிட்ட உள்நாட்டு சேவையை 30 க்கும் மேற்பட்ட விமானங்கள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்து உள்ளது. விமான நிலைய ஆணைய தரவுகளில் இருந்து வெளிவந்து உள்ள நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரை உள்நாட்டிற்கு 10,591 மற்றும் வெளிநாட்டுக்கு 11,642 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன.
கடந்தாண்டு விட இந்த 15 சதவீதம் அதிகம் சர்வதேசம் 1.60 லட்சம் உள்நாட்டு பதினைந்து புள்ளி 98 லட்சம் என மொத்தம் 17.58 லட்சம் பயணிகள் பயணித்து உள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடகையில் 11% அதிகம்.
கோவை விமான நிலையம் தமிழகத்தில் அதிக போக்குவரத்து நிறைந்த விமான நிலையமாக மாறி உள்ளது. கோவையில் இருந்து கொழும்பு, பாங்காங், துபாய், தோகா ஆகிய பகுதிகளுக்கு விமான தேவை உள்ளது.
அதேபோல் டெல்லி, புவனே, சென்னை, கோவா ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
தற்போது அகமதாபாத்துக்கு விமானம் இயக்கப்படுகிறது இது வரவேற்கத்தக்கது. விமான நிலைய விரிவாக்கத்தை விரைந்து துவங்கினால் பயணிகள் பயன்பெறுவார்கள் என்றும் விமானப் பயணிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan