Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 31 அக்டோபர் (ஹி.ச.)
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசிய அதிமுக மாநில நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மீது தமிழ் புலிகள் கட்சி குற்றம் சாட்டியது.
மேலும் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாடு மக்களை கேவலமாக பேசி நாட்டின் பொது அமைதியை எடுக்க பாஜக மற்றும் மோடி திட்டம் தீட்டுவதாகவும் தெரிவித்து,
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மோடி உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளை எரித்து தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan