Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 31 அக்டோபர் (ஹி.ச.)
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இன்று (அக் 31) டில்லி ராஜ் காட்டில் உள்ள இந்திரா நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இது குறித்து ராகுல் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் இந்திரா ஒரு அனைத்து சக்திகளுக்கும் முன்னால் அஞ்சாத, உறுதியான, அசைக்கமுடியாத தலைவர். இந்தியாவின் அடையாளத்தையும், தன்னம்பிக்கையும் விட மேலானது எதுவும் இல்லை என்று நீங்களே எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள்.
உங்கள் தைரியம், கருணை மற்றும் தேசபக்தியே இன்றும் எனது ஒவ்வொரு அடியையும் ஊக்கப்படுத்துகின்றன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b