குற்றாலம் மெயின் அருவியில் 3 நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி
தென்காசி, 31 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்த
Courtallam Falls


தென்காசி, 31 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியில் சற்று தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் தடை விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது மழையின் அளவு குறைந்து வெயிலின் தாக்கம் காணப்பட்டு வரும் நிலையில், அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி உள்ளிட்ட 4 அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பழைய குற்றால அருவியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் போது சேதங்கள் அதிக அளவில் உள்ள நிலையில், இதுவரை சேதங்கள் சீரமைக்கப்படாததால் தற்போது வரை பழைய குற்றால அருவியில் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN