ஆசியா ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற தீக்ஷாவிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து
சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.) சீனாவில் கடந்த வாரம் பேட்மிண்டன் ஆசியா U17 & U15 ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளியான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை எஸ்.ஆர்.தீ
ஆசியா ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற தீக்ஷாவிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து


சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)

சீனாவில் கடந்த வாரம் பேட்மிண்டன் ஆசியா U17 & U15 ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில் தமிழக அரசின் சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளியான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை எஸ்.ஆர்.தீக்ஷா, U17 பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

அவர் இன்று (அக் 31) சென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தீக்ஷாவை பாராட்டியதோடு தமிழக அரசின் சார்பில் அவருக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.

Hindusthan Samachar / vidya.b