நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் இடைகால ஜாமினை நவம்பர் 7ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச) நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் இடைகால ஜாமினை நவம்பர் 7ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் 3வது முறையாக ஜாமின்
Deva


சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச)

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் இடைகால ஜாமினை நவம்பர் 7ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் 3வது முறையாக ஜாமின் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

சொந்த பணமாக 100 கோடி ரூபாயை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமனறத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டும், 1 ரூபாய் கூட டெபாசிட் செய்யவில்லை என பாதிக்கபட்டவர்கள் தரப்பு தெரிவித்தனர்.

தேவநாத யாதவ் தரப்பில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்தார்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன் முன்பு வழக்கை பட்டியலிட நீதிபதி பதிவுதுறைக்கு உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ