கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடி குழுவுக்கு 5 லட்சமும் ஊக்க தொகையாக வழங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்
சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.) கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடி குழுவுக்கு 5 லட்சமும் ஊக்க தொகையாக வழங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் வழங்கியுள்ளார். சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற
Mari


சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)

கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடி குழுவுக்கு 5 லட்சமும் ஊக்க தொகையாக வழங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகாவையும், அவரது வெற்றிக்கு பக்க பலமாக இருந்த கண்ணகி நகர் கபடிக்குழுவின் முயற்சியை பாராட்டி அவர்களை கவுரவிப்பதற்காக கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

அதேபோல் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கார்த்திகாவிற்கு ₹ 5 லட்சமும், கண்ணகி நகர் கபடி குழுவிற்கு ₹ 5 லட்சமும் காசோலைகளை இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ஸ்டூடியோஸ் சார்பாகவும், அப்ளாஸ் என்டேர்டைன்மெண்ட் சார்பாகவும மற்றும் பைசன் படக்குழு சார்பாகவும் இயக்குனர் மாரி செல்வராஜ் வழங்கியுள்ளார்.

இன்னும் இது போல் வேலியே போட முடியாத பல வெற்றிகளை கண்ணகி நகர் கார்த்திகாக்கள் பெறட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ