போதை மாத்திரைகள் விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் கைது
ராணிப்பேட்டை, 31 அக்டோபர் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த தேவதானம் பகுதியில் வலி நிவாரணி மாத்திரையை போதை மாத்திரையாக இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக வாலாஜா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர்
Prison


ராணிப்பேட்டை, 31 அக்டோபர் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த தேவதானம் பகுதியில் வலி நிவாரணி மாத்திரையை போதை மாத்திரையாக இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக வாலாஜா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான காவல்துறையினர் தேவதானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு இரண்டு இளைஞர்கள் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது ஜேஜே நகர் தேவதான பகுதியை சேர்ந்த தருண் (23) மற்றும் மேட்டு தெரு கன்னிகாபுரம் குடிமல்லூர் பகுதியை சேர்ந்த தருண் (23) ஆகிய இரண்டு நபர்கள் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்த குற்றத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் இரண்டு நபர்களின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் இருவரிடமிருந்து 800 வலி நிவாரண மாத்திரைகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் இருவரையும் காவல்துறையினர் நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN