கரூர் வழக்கு - வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் முதன்முறையாக ஆய்வு!
கரூர், 31 அக்டோபர் (ஹி.ச.) கரூர், வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தை முதன் முறையாக ஆய்வு சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்‌. சூடுபிடித்துள்ள கரூர் வழக்கில், சாட்சியங்களை விசாரித்த நிலையில், சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்
Karur CBI


கரூர், 31 அக்டோபர் (ஹி.ச.)

கரூர், வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தை முதன் முறையாக ஆய்வு சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்‌. சூடுபிடித்துள்ள கரூர் வழக்கில், சாட்சியங்களை விசாரித்த நிலையில், சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகளிடம் சாட்சியங்கள் பெறுவதற்காக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில், 4 பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிஐ கூடுதல் SP முகேஷ் குமார் அளித்திருந்த சம்மன் அடிப்படையில், 4 பேர் தற்போது ஆஜராகி இருக்கின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அறிந்திருந்தால், சாட்சியங்கள் பெரும் நோக்கத்திற்காக சம்மன் மூலமாக நேரில் ஆஜராகும்படி இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ள சுற்றுலா மாளிகைக்கு பொதுமக்கள், போட்டோகிராபர், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் என எஸ்.ஐ.டி தரப்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஆஜராகி உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN