Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 31 அக்டோபர் (ஹி.ச.)
மயிலாடுதுறை வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மயிலாடுதுறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
மயிலாடுதுறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் 22 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஒன்பது பேர் குற்றவாளிகள் என மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி வழங்கி உள்ள தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அவர் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒருவர் உயிரிழந்த நிலையில் 12 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
தீர்ப்பை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் மேற்பார்வையில் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்
Hindusthan Samachar / ANANDHAN