Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா மு. நாசர் இன்று (அக் 31) சென்னை தலைமை செயலகத்தில் 'அயலக தமிழர் தினம் 2026' விழாவில் கலந்து கொள்ள விரும்பும் அயலக தமிழர்கள் தங்கள் விவரங்களை அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில் பதிவு செய்வதற்கான வலைதள பக்கத்தினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை கூடுதல் செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
Hindusthan Samachar / vidya.b