தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.) தமிழகம், புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது, நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக,
தமிழகம்  மற்றும்  புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகம், புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை, நீலகிரி மாவட்டம் செருமுள்ளி ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற் றழுத்த தாழ்வு மண்டலம், அதே பகுதியில் நீடிக்கிறது. நாளைக்குள் இது, மத்திய கிழக்கு பகுதியை கடந்து செல்லும் வகையில் நகரக்கூடும்.

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்புள்ளது. அது சில மணி நேரங்கள் மட்டுமே புயலாக நீடித்து பின்னர் செயலிழந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக, தென் சீனக் கடல் பகுதியில் இருந்து தாய்லாந்து வழியாக மியான்மர் கடல் பகுதிக்கு ஒரு காற்றழுத்தம் 3ம் தேதி வந்து சேரும்.

இந்நிலையில் அரபிக் கடல் பகுதியில் இருந்து வங்கக் கடல் நோக்கி காற்று பயணிப்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில், நவ., 5 வரை லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b