Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரியும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி ப்ரஸ்நெவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று
(அக் 31 ) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், கட்டப்படும் கட்டடத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. சதுப்பு நிலத்தில் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்த ஆய்வு 2 வாரத்தில் முடிவடையும் என முறையிடப்பட்டது.
பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற, பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகள் தெரியாமல் சிஎம்டிஏ கட்டுமானத்துக்கு அனுமதித்தது எப்படி? பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணி மேற்கொள்ளக் கூடாது.நவம்பர் 12ம் தேதிக்குள் தமிழக அரசு, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / vidya.b