புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும் அதற்கான தொகையை மானியமாக அரசு செலுத்தி விடும் - அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி, 31 அக்டோபர் (ஹி.ச.) புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்த மின் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் ஒரு யூனிட்க்கு 20 பைசா என உயர இருக்கிறது. இது தொடர்பாக காரைக்காலில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர
அமைச்சர் நமச்சிவாயம்


புதுச்சேரி, 31 அக்டோபர் (ஹி.ச.)

புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்த மின் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் ஒரு யூனிட்க்கு 20 பைசா என உயர இருக்கிறது.

இது தொடர்பாக காரைக்காலில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,

மின் கட்டணம் நிச்சயம் உயர்த்தப்படாது.

மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்த கூறினாலும் புதுச்சேரி அரசு உயர்த்தாது.

அதற்கான தொகையை மானியமாக அரசு செலுத்தி விடும்.கடந்த ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தக்கூறிய போது மக்களிடம் கட்டணத்தை வசூலிக்காமல் அரசே மானியம் செலுத்தியது.அதே நடைமுறை இந்த ஆண்டு பின்பற்றப்படும்.

மின் கட்டண உயர்வு பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது.

பழைய கட்டணமே தொடரும் என உறுதி அளித்தார்.

பாஜக கூட்டணி ஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படாத காரணத்தினால்

பாஜக கூட்டணியில்

இருந்து விலகி திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் வரவேண்டுமென முதலமைச்சர் ரங்கசாமிக்கு காரைக்கால் திமுக சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கோரிக்கை வைத்திருப்பது குறித்து கேட்டதற்கு,

முதலமைச்சரிடம் காரியங்களை ரகசியமாக திமுக சாதித்து செல்கிறது.

முதலமைச்சர் அலுவலகத்தில் மறைமுகமாக திமுக எம்எல்ஏக்கள் காரியத்தை சாதித்து செல்கிறார்கள்..

இந்த ஆட்சியிலும் முதலமைச்சரிடமும் அதிக பலனை திமுக எம்எல்ஏக்கள் தான் அனுபவித்து வருகிறது.யார் யாருடன் சேர வேண்டும் என அந்தந்த கட்சி தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள். அதற்கு இப்போது அவசியம் ஏற்படவில்லை என நமச்சிவாயம் பதில் அளித்தார்.

ஆளுநருக்கு முதல்வருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Hindusthan Samachar / Durai.J