திமுக INDIA கூட்டணியில் இருப்பதால் பலமே தவிர பலவீனம் இல்லை - திருமாவளவன்
சென்னை, 31 அக்டோபர் (ஹி ச.) அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் தோழமை சங்கங்கள் இணைந்து பத்திரிகையாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும் 2026 ல் யாருக்கு வாக்களிப்பது என்ற கருத்தரங்கமும் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் வி
Thiruma


சென்னை, 31 அக்டோபர் (ஹி ச.)

அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் தோழமை சங்கங்கள் இணைந்து பத்திரிகையாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும் 2026 ல் யாருக்கு வாக்களிப்பது என்ற கருத்தரங்கமும் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

இதில் விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்.....

தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பீகார் பரப்புரையின் பிரதமர் மோடி பேசியிருப்பது பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன்,

பீகாரில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இத்தகைய அரசியலை செய்கிறது. பிரதமரே இப்படி பேசி இருக்கிறார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது..

பீகாரை சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ஏதாவது புகார் வைத்தார்களா? வழக்கு ஏதேனும் பதிவாகியுள்ளதா? அதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்று தெரியவில்லை.

பீகார் மட்டுமல்ல மற்ற மாநிலங்களில் இருந்து கூட புலம்பெயர் தொழிலாளர்களாக தமிழ்நாட்டில் பல பேர் பணியாற்றி வருகிறார்கள் அவர்களுக்கு எங்கே எந்த பிரச்சினையும் இல்லை..

எப்படி இவ்வளவு பெரிய பொய்யை பிரதமர் தேர்தல் ஆதாயத்திற்காக பேசுகிறார் என்ற கேள்வி எழுப்புகிறது இது எவ்வளவு ஆபத்தான அணுகுமுறை என்ற அச்சம் எழுகிறது.

தமிழ்நாட்டில் அப்படி ஏதேனும் வழக்குகள் பதிவாகி இருக்கிறதா? என்ற ஆதாரத்தை பிரதமர் காட்ட வேண்டும். இது ஏற்புடையது அல்ல பிரதமரின் கருத்தை விசிக கட்சி வன்மையாக கண்டிக்கிறது..

பிரதமர் திமுகவை தான் குறிப்பிட்டுள்ளார் திமுகவை சொன்னால் தமிழர்களே சொன்ன மாதிரி என்ற ஒரு பார்வையை திமுக உருவாக்கி இருக்கிறார்கள் என்று தமிழிசை பேசிய கருத்திற்கு,

பாஜகவை விமர்சிக்கும் பொழுது ஒட்டுமொத்த இந்துக்களையும் விமர்சிக்கிறார்கள் என்ற போக்கை பாஜக உருவாக்குகிறார்கள்.

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆர் எஸ் எஸ், பாஜக அவர்கள் செய்கின்ற மதவாத அரசியலையும் விமர்சிக்கும் போதெல்லாம் அப்படி விமர்சிப்பவர்களை இந்துக்களின் விரோதிகள் என்று போக்கை உருவாக்குகிறார்கள் பாஜக.. பிரதமர் திமுக என்ற பொருளில் பேசவில்லை தமிழகத்தில் பீகாரிகளை துன்புறுத்துகிறார்கள் என்று தான் பேசியுள்ளார்.

தெலுங்கானா கேரளம் போன்ற மாநிலங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்ற கருத்தையும் சேர்த்து பதிவு செய்துள்ளார் பிரதமர்.

அவருக்கு தேர்தல் அரசியல் முக்கியமானதாக உள்ளது. ஆதாயம் தேடுவதே அவரது நோக்கமாக இருக்கிறது. அதற்காக ஒடிசாவில் கூட ஒடிசா மாநிலத்தில் ஒரு தமிழன் ஆட்சி செய்ய அனுமதிப்பீர்களா? என்று கேட்டுள்ளார். ஒரு ஐஏஎஸ் அதிகாரி முதல்வராகிவிடுவார் என்று யுகம் செய்து அதையே அரசியல் ஆக்கியவர்.

அதேபோல் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் பெருமைகளை பேசுகிறார்கள், பாரதி கவிதையை மேற்கோள் காட்டுகிறார்கள், திருவள்ளுவரின் குரலை பேசுகிறார்கள், ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு பெருமை உள்ளது என சாதி பெருமையை பேசுகிறார்கள்..

பிரதமர் திமுக என்ற பொருளில் பேசவில்லை தமிழகத்தில் பீகாரிகளை துன்புறுத்துகிறார்கள் என்று தான் பேசியுள்ளார்.

இவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்கான யுக்திகளை கையாளுகிறார்கள். மக்களிடையே பாகுபாடுகளையும் மோதலையும் உருவாக்குகிறார்கள்

.அதுதான் பிரதமரின் அணுகுமுறையாக உள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

Sir தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினால் பாஜக எதிர்க்கும் மேலும் பிகாரில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீக்கியது போலியான கட்டமைப்பு என்பது போல் பேசியுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்திற்கு பதில் அளித்தவர்,

அண்மையில் தலைமை தேர்தல் அலுவலர் தலைமையில் அனைத்து கட்சிகளின் சார்பில் இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விசிக கட்சியின் சார்பில் பங்கேற்றோம்.

எஸ் ஐ ஆர் கூடாது அதை நடைமுறைப்படுத்தக் கூடாது உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. திமுக விசிக ஆகிய கட்சிகள் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது.

எனவே SIR சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரையில் இங்கே நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகளின் கட்சி சார்பில் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளோம்.

அதேபோல் பாஜக தரப்பில் SIR வேண்டாம் என்ற கருத்து சொன்னதாக தெரிகிறது. ஆனால் பீகாரில் அது பற்றி பேசும் பொழுது அவ்வாறு நடக்கவில்லை என்று வக்காலத்து வாங்குகிறார்கள்.

ராகுல் காந்தி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருக்கிறார் தேர்தல் ஆணையம் பாஜகவின் கைபாவையாக மாறி உள்ளது.

பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க கூடியவர்களை எல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான யுக்தியாக தான் இந்த நடவடிக்கையை பயன்படுத்துகிறார்கள். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆபத்தானது. அதனால்தான் தமிழ்நாட்டில் இதனை அனுமதிக்க மாட்டோம் இன்று வலுவாக குரல் எழுப்பி வருகிறோம்.

நவம்பர் 2 தேதி முதலமைச்சர் தலைமையில் SIR தொடர்பான கலந்தாய்வுக் கூட்டமும் நடக்க உள்ளது. அதிமுக போன்ற கட்சிகளும் எதற்கு ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன்.

பாஜக கையில் எடுத்திருக்கிற இந்த ஆபத்தான நடவடிக்கையை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று அனைத்துக் கட்சிக்கும் விசிக சார்பில் வேண்டுகோள் விடுகிறேன்.

INDIA கூட்டணியில் திமுக ஒரு அங்கமாக இருப்பதால்தான்

வடமாநிலத்திலும் தோல்வி பெறுகிறார்கள் என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசிய கருத்திருக்கு,

INDIA கூட்டணியை உருவாக்கியதில் திமுக பெரும் பங்கு உள்ளது. திமுக INDIA கூட்டணியில் இருப்பதால் பலமே தவிர பலவீனம் இல்லை.

தமிழகத்தின் காலை உணவு திட்டத்தை பீகாரின் தேர்தல் வாக்குறுதியாக NDA வழங்கியுள்ளது என்ற கருத்திற்கு, திராவிட மாடலை பாஜகவும் பின்பற்றுகின்றது என்பது இதுவும் ஒரு சான்று.

என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ