இன்று சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் - பிரதமர் மோடி மரியாதை
காந்திநகர், 31 அக்டோபர் (ஹி.ச.) சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி இன்று (அக் 31) காலை மரியாதை செலுத்தினார். அப்போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை
இன்று சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் - பிரதமர் மோடி மரியாதை


காந்திநகர், 31 அக்டோபர் (ஹி.ச.)

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி இன்று

(அக் 31) காலை மரியாதை செலுத்தினார். அப்போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.

தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துவோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b