Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 31 அக்டோபர் (ஹி.ச.)
திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது,
அமலாக்கத்துறை சோதனை எங்களுக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனை பொழுது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் அது குறித்து ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை தமிழக போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள்.
முறைகேடு நடந்ததா என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்தவித தவறும் செய்யவில்லை.
திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம்.
திமுகவில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.
தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விசாரணையில் நாங்கள் குற்றம் அற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்.
அதிமுக கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓபிஎஸ் தினகரன் உள்ளிட்டோரை திமுகவின் பி டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி அவர் வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார்.
எஸ்.ஐ.ஆர் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும் ஆனால் வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும் நீக்குவதையும் தான் எதிர்க்கிறோம் என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN