Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீரங்கம், 31 அக்டோபர் (ஹி.ச.)
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி வைபவத்துடன் இன்று தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்வு வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று ஆயிரங்கால் மண்டம் முன்பு உள்ள மணல்வெளியில் நடைபெற்றது.
சொர்க்கவாசல் திறப்பு வைபவம் டிசம்பர் 19ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, டிசம்பர் 20ஆம்தேதிமுதல் பகல்பத்து உற்சவமும், 29ஆம் தேதி நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரமும், இராப்பத்து உற்சவத்தின் முதல்நாளான டிசம்பர் 30ஆம் தேதி அன்று அதிகாலை 5.45 மணிக்கு பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறும்.
Hindusthan Samachar / ANANDHAN