காங்கிரஸ் அரசு சர்தார் வல்லபாய் படேலுக்குப் போதுமான மரியாதை அளிக்கவில்லை - மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
புதுடெல்லி, 31 அக்டோபர் (ஹி.ச.) சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (அக் 31) புதுடெல்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்
காங்கிரஸ் அரசு சர்தார் வல்லபாய் படேலுக்குப் போதுமான மரியாதை அளிக்கவில்லை - மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு


புதுடெல்லி, 31 அக்டோபர் (ஹி.ச.)

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (அக் 31) புதுடெல்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டில்லியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, நடந்த தேசிய ஒற்றுமை தின விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

இன்று சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள். இன்று எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள், 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி, சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசிய ஒற்றுமை தின விழாவை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.

வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அதை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்தார். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஒன்றிணைப்பதிலும், வளர்ச்சி அடைந்த நாட்டை உருவாக்குவதிலும் சர்தார் வல்லபாய் படேல் மகத்தான பங்களிப்பை வழங்கி உள்ளார். காங்கிரஸ் அரசு சர்தார் வல்லபாய் படேலுக்குப் போதுமான மரியாதை அளிக்கவில்லை.

41 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. நாட்டில் எங்கும் ஒரு நினைவு இடத்தையும் கட்டப்படவில்லை.

நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற போதுதான், சர்தார் படேலின் நினைவாக ஒரு பிரமாண்டமான நினைவு இடத்தை கட்டினார்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Hindusthan Samachar / vidya.b