Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 31 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025 நிகழ்வில், பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்துகொண்டு மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பாராட்டினார்.
பின்னர் கல்லூரி தலைவர் ரவி மற்றும் கல்லூரி செயல் அதிகாரி அனுஷா ரவி ஆகியோர் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் பேசிய அவர்,
நான் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தபோது வெறும் 23 பேரே பணியாற்றினோம்.
இப்போது 30,000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றுவது இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்று ஆகும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்த அவர்,
அப்துல் கலாமுடன் பணிபுரிந்தபோது, அவரை நாங்கள் பிரைம் மினிஸ்டர் (பிரதமர்) என்றுதான் அழைப்போம். ஆனால், அவர் பின்னாளில் குடியரசுத் தலைவர் ஆகிவிட்டார். இஸ்ரோவின் பல ராக்கெட்டுகளை இயக்குகின்ற 'விகாஸ் என்ஜினை' உருவாக்கியதில் பங்காற்றியது எனக்கு மறக்க முடியாத பெருமை என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இன்றைய மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதைப் பாராட்டிய நம்பி நாராயணன், இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத்தான் தேர்ந்தெடுத்து அதில் முழு மனதுடன் உழைய வேண்டும்.
அப்போதுதான் உங்கள் வளர்ச்சியும் நாட்டின் முன்னேற்றமும் ஒன்றாக உயரும் என அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நம்பி நாராயணன்,
இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் அனைத்துச் செயற்கைக்கோள்களும் உறுதியானவை. ககன்யான் திட்டம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது, அது அடுத்த ஆண்டு செயல்பாட்டிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று தெரிவித்தார்.
ஒரு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த விமர்சனங்களையும் தடைகளையும் தாண்டி வரவேண்டும் என்றும், வானிலை அறிவிப்புகள் 'ப்ராபபிலிட்டி தியரி' அடிப்படையில் அமைந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / V.srini Vasan