Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.எ.டி) கோயம்புத்தூரில் உள்ள ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட எ.எ.ஐ -யிடம் என்.ஓ.சி பெற்றுள்ளது. டெண்டர்கள் மற்றும் பிற ஒப்புதல்களுக்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளன.
கோவையில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கத் தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் இந்த திட்டம் என்பது செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிரிக்கெட் மைதானத்துடன் இணைந்து வணிக வளாகமும் அமைக்கப்பட உள்ளது.
அதன்படி கோவை மாவட்டம் ஒண்டிபுதூரில் 20 ஏக்கரில் கிரிக்கெட் மைதானமும் 10 ஏக்கரில் வணிக வளாகமும் அமைக்கப்பட உள்ளது. சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரையில் அமரும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வலைப்பயிற்சி மேற்கொள்ளும் இடம், உணவகம், உயர்தர இயற்கை வசதி, உட்புற பயிற்சி அரங்கம், கிரிக்கெட் வீரர்களுக்கான ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த ஸ்டேடியத்திற்கான மாதிரி புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
கருத்துரு திட்டம் மற்றும் திட்ட அமைப்புடன் கூடிய முன்மொழிவுகளை நவம்பர் 24, 2025 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO) அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b