தேர்தல் ஆயுதம் போர்க்களத்தில் தான் எடுக்க முடியும் - டிடிவி தினகரன்
மதுரை, 1 நவம்பர்(ஹி.ச.) மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். முன்னதாக செங்கோட்டையன் மீதான நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
Ttv


மதுரை, 1 நவம்பர்(ஹி.ச.)

மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார்.

முன்னதாக செங்கோட்டையன் மீதான நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் 72 ல் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.கட்சியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் அவர்கள்

பசும்பொன்னில் தங்களை சந்தித்தது அரசியல் ரீதியான நிகழ்ச்சி இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பசும்பொன் வரும்போது எல்லாம் செங்கோட்டையன் அம்மாவின் பாதுகாப்பிற்காக கட்சி சார்பாக அங்கு வருவார். ஜெயலலிதாவின் அரசியல் சுற்றுப்பயணத்தின் பாதுகாப்பில் செங்கோட்டையன் முக்கிய பங்கு ஆற்றியவர். நாங்கள் மூவரும் சந்தித்ததை அரசியல் நிகழ்வாக பார்க்கவில்லை,

2 மாதங்களுக்கு முன்பே எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.சேவல் சின்னம் தொடங்கி தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்.

எம்ஜிஆர் கால தொண்டர்களில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள மூத்த நிர்வாகி.

கட்சிக்கு எதிராக செங்கோட்டையன் எந்த நடவடிக்கையும் இல்லை.ஒன்றாக சேர வேண்டும் என எங்களிடம் போனில் மட்டுமே பேசினார்.

துரோகத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்தோம்.அவர் அரசியல் ரீதியாக பசும்பொன்னில் செங்கோட்டையன் ஒன்றுமே பேசவில்லை.

இரட்டை இலை பலவீனப்படும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். தன் நலத்திற்காக கட்சியை அழிக்க குரங்கு கையில் கொடுத்த பூமாலையாக மாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்றுதான் சொன்னேன் நான். செங்கோட்டையன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.

கங்காரு குட்டியை மடியில் கட்டிப்பிடித்தது இருப்பது போல எடப்பாடி பழனிச்சாமி பதவியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிச்சாமி வழி வகுக்கிறார். மற்றவர்களை பார்த்து துரோகி என கூறும் தகுதி கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொரிந்து கொண்டது போல் எடப்பாடி செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்.

எங்களை நேரில் சந்திக்கும் தைரியம் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடையாது.

எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய பழனிசாமி துரோகியா ? நாங்கள் துரோகியா?

அவர் முதல்வராக அவருக்கு ஆதரவு வழங்கிய 18 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி துரோகியா? நாங்கள் துரோகியா?

ஹிட்லர் போன்ற மனப்பான்மையில் உள்ள பழனிச்சாமி ,

துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும்.

பதவி கொடுத்த சசிகலாவை துரோகி என்கிறார் எடப்பாடி பழனிசாமி.

திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நான் துரோகியா. எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைத்த நாங்கள் துரோகியா. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது எடப்பாடிக்கு எதிராக இருந்த அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைத்து வாக்களிக்க வைக்க காரணமாக இருந்த நாங்கள் துரோகிகளா?

ஹிட்லர் போன்ற மனப்பான்மையில் செயல்படும் எடப்பாடி பழனிசாமி துரோகத்தை பற்றி எல்லாம் பேசக்கூடாது. இத்தேர்தலில் உறுதியாக தென்தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கற்பிப்பார்கள். மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க போகிறார்.

தகுதியில்லாத பழனிசாமி தகுதி உள்ள மூத்த நிர்வாகிகளை நீக்குகிறார்.

2021ல் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

எங்களை பி டீம் என்கிறார்கள்.2024ல் நாடாளுமன்ற தேர்தலில் டம்மி வேட்பாளர்கள் போட்டு திமுகவின் வெற்றிக்கு காரணம்.

ஜெயலலிதா என்னை நீக்கினார்கள். என்னை துணைப்பொதுச்செயலாளர் என்னை ஏற்றுக்கொண்டு எனக்காக தொப்பி சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

அமமுக எடுக்கும் ஆயுதத்தை வரும் தேர்தலில் பாருங்கள்.

எங்களோடு ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜைக்கு வந்ததால் கட்சியிலிருந்து கொங்கு நாட்டு தங்கம் செங்கோட்டையன் அவர்களை கட்சியில் இருந்து நீக்கிய துரோகத்தின் உருவம் பழனிச்சாமிக்கு தென் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் தேர்தலில் பதில் அளிப்பார்கள்.

தென் தமிழ்நாட்டில் மிகப் பெரிய தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார்.

தேவர் ஜெயந்திக்கு வந்ததற்காக செங்கோட்டையனை நீக்கியதற்காக தென் தமிழக மக்கள் அதனை தங்களுக்கு நேர்ந்த அவமானமாக கருதுகிறார்கள்.உறுதியாக இந்த தேர்தலில் அது எதிரொலிக்கும்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி விதிகள் பழனிச்சாமிக்கு தெரியாதா?

விதிகளையே திருத்தி கேவலப்படுத்தியவர் பழனிசாமி.

விதிகளையே புறந்தள்ளியவர் விதியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

எங்களை bteam என்று சொல்லும் பழனிச்சாமி தான் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமானவர்.

இந்த தேர்தலில் பழனிச்சாமியின் துரோகம் வீழ்த்தப்படும்.

கொடைநாடு கொலை வழக்கை பற்றி பேசினாலே பழனிச்சாமி பதறுவார். பதறுகிறார்

அரக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது அழிவை சந்திப்பார்கள் கடைசியில் சூரசம்ஹாரம் நடக்கும்

எடப்பாடிக்கு.

எடப்பாடி பழனிச்சாமி வீழ்த்துவதற்கு நாங்கள் ஜனநாயக முறையில் எடுக்கப் எடுக்கப் போகும் ஆயுதத்தை பொறுத்திருந்து பாருங்கள்

எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதற்கு ஆயுதமாக விஜயை கையில் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு:

போர்க்களத்தில் தான் ஆயுதத்தை எடுக்க முடியும். அந்த ஆயுதத்தை 3 மாதம் பொறுத்திருந்து

தேர்தலில் பொறுத்திருந்து பாருங்கள் என டிடிவி தினகரன் பதில் அளித்தார்.

Hindusthan Samachar / Durai.J