Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 1 நவம்பர் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் பரமத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் தயாரிக்கப்படும் எம் சாண்ட் மணல் மற்றும் பி சாண்ட் மணல்கள் கட்டுமான தேவைக்களுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
தென்னிலை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியிலிருந்து இன்று (01.11.2025) காலை கட்டுமான தேவைக்காக எம் சாண்டை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியானது சின்னத்தாராபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
அச்சமயத்தில் லாரியில் இருந்த 3 வட மாநில தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தென்னிலை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b