Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 1 நவம்பர் (ஹி.ச.)
கோவையை சேர்ந்த 13 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு சமீபத்தில் ஜப்பானின் ஹமாமட்சுவுக்குச் சென்றது.
அங்கு அவர்கள் முன்னணி தொழில்துறையினரை சந்தித்து, வணிக மேம்பாடு தொடர்பான வழிகளை ஆராய ஹமாமட்சு நகர மேயரைச் சந்தித்தனர்.
இந்நிலையில் ஜப்பான் நாட்டின் துணை மேயர் .நைட்டோ ஷின்ஜிரோ தலைமையில் ஜப்பான் நாட்டில் இருந்து வந்த குழுவினர் கோவையில் தொழில் துறையினருடன் ஆலோசணை மேற்கொண்டனர்.
கோவை சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதில் கல்லூரியின் தலைவர் அசோக் பக்வத்சலம்,கார்பரேட் இணைப்புகளின் தேசிய இயக்குனர் வேதா பெஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
ஜப்பான் இந்திய வர்த்தகத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிப்பதாகவும்தற்போது கோவை நகர் மற்றும் ஜப்பானின் ஹமா மட்சு நகர் இடையே தொழில் வர்த்தகம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகவும்,
கோவையில் இருந்து ஜப்பானிற்கு தொழில் துவங்கிவதற்கான வாய்ப்புகள் இனி கூடுதலாக உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த தொடர்பு இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக குறிப்பிட்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan