Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 1 நவம்பர் (ஹி.ச.)
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி டிவிஷன், வால்பாறை ரேஞ்ச் லிமிட்டில் இருக்கும் வில்லோனி எஸ்டேட் (F.No.12) பகுதியில், இன்று கள ஊழியர்களின் ரோந்துப் பணியின் போது ஒரு வயதான பெண் புலி இறந்து கிடந்ததை பார்க்கப்பட்டது.
புலியின் உடம்பில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
அனைத்து உடல் பாகங்களும் அப்படியே உடம்பில் உள்ளன.
பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan