டெல்லியில் பிஎஸ் 3, 4 பெட்ரோல், டீசல் சரக்கு வாகனங்கள் இன்று முதல் இயங்க தடை
புதுடெல்லி , 1 நவம்பர் (ஹி.ச.) இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக இன்று (நவ 01) முதல் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட
டெல்லியில் பிஎஸ் 3, 4 பெட்ரோல், டீசல் சரக்கு வாகனங்கள் இன்று முதல் இயங்க தடை


புதுடெல்லி , 1 நவம்பர் (ஹி.ச.)

இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு பகுதியாக இன்று (நவ 01) முதல் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாசு கட்டுப்பாடு நடவடிக்கையாக டெல்லியில் பதிவு செய்யப்படாத பிஎஸ் 3, 4 பெட்ரோல், டீசல் சரக்கு வாகனங்கள் மாநில எல்லைக்குள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சி.என்.ஜி., மின்சார வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்படும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே பிஎஸ் 3, 4 பெட்ரோல், டீசல் சரக்கு வாகனங்கள் டெல்லி எல்லைக்குள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு வணிக சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் அரசின் தடையால் வணிகம் பாதிக்கப்படும் என கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b