Enter your Email Address to subscribe to our newsletters



கோவை, 1 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அலாவுதீன்.
கார் ஓட்டுநர் இந்நிலையில் அவர் கடந்த 14.4.2024 அன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர். அதன் பின்னர் திரும்பவில்லை, அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
அவர் கிடைக்கவில்லை இதை அடுத்து அவரது குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதன் இடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமுகை சாலையில் காணாமல் போன அலாவுதீனின் தம்பி முகமது ஹாரிஸுக்கும், மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர். தனது அண்ணன் காணாமல் போனதற்கு அந்த நபர் தான் காரணம் என முகமது ஹாரிஸு குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அந்த நபர் காணாமல் போன அலாவுதீனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக தெரிவித்தார்.
இதை அடுத்து காவல் துறையினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அலாவுதீனுக்கும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்த காரமடை நகராட்சியின் வார்டு கவுன்சிலரான ரவிக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் சரண் குமாரின் மனைவி பூஜா என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
இது குறித்து அறிந்ததும் சரண்குமார் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது. இதை அடுத்து பூஜா மைசூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.
இந்த பிரச்சனைக்கு அலாவுதீன் தான் காரணம் என கோபம் கொண்ட சரண்குமார் தனது தந்தை ரவிக்குமார், சகோதரர் மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து அலாவுதீன் அடித்து கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை மாதேஸ்வரன் மலைக்கோவில் பின்புறம் உள்ள புதற்காட்டில் வைத்து எரித்து உள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து எலும்புகளை போலீசார் சேகரித்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பினர்.
கார் ஓட்டுநர் காணாமல் போன வழக்கில் போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.
மேலும் இது தொடர்பாக கவுன்சிலர் ரவிக்குமார், சரண்குமார், மணிகண்டன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கார் ஓட்டுநர் கொலை வழக்கில் 1 1/2 ஆண்டுகளுக்கு பின் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan