Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 கோடியே 90 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர்,
60 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 10 க்கும் மேற்பட்டோருக்கு வீட்டுவசதி வாரியப் பணிக்கான நியமனக் கடிதங்களையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வீட்டுவசதி வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர் (சிவில்) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 36 நபர்களுக்கும், நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் அளவர் / உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 24 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஈரோடு, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் 1177 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் 71 கோடியே 9 இலட்சம் ரூபாய் செலவில் இரயில்வே கடவுப் பாதைகளுக்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள இரண்டு சாலை மேம்பாலங்களை திறந்து வைத்த முதலமைச்சர்,
கலைமாமணி முருகேச பாண்டியன் தொகுத்த கருணாநிதியின் அனைத்து நாடகங்கள் அடங்கிய இரு பாகங்கள் கொண்ட நூல்களை வெளியிட்டார்.
பல்வேறு மாவட்டங்களில் கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள் , இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கிடும் விதமாக அதற்கான ஆணையினை நகராட்சி ஆணையர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் முதலமைச்சர் வழங்கினார்.
Hindusthan Samachar / P YUVARAJ