Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 நவம்பர் (ஹி.ச)
சேலத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நான் பங்கேற்றேன்.
எம்ஜிஆர் , ஜெ. படம் இடம்பெற வில்லை என்று கூறி அதில் பங்கேற்பதை தவிர்த்தார் செங்கோட்டையன் . அது கட்சி சார்பற்றி நிகழ்ச்சி. திமுக ,காங் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தோரும் அந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தவர்களில் இருந்தனர். அதை எடுத்து கூறியும் செங்கோட்டையன் நிராகரித்தார்.
அந்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பலன் பெறும் 30 சதவீதம் ஏரிகள் கோபி சட்டமன்ற தொகுதியில் இருப்பவை .
செங்கோட்டையன் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கருணாநிதி , ஸ்டாலின் படங்கள் மட்டுமே இருந்தன. அப்போதே திமுகவின் பி டீம் ஆகிவிட்டார்.
ஓ.பன்னீர் செல்வம் கட்சியை விட்டு பிரிந்து சென்றவர் அல்ல , பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்.
2500 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றிய சிறப்பு தீர்மானம் அது.
அதற்கு எதிராக செயல்பட்டால் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும் என கட்சியில் 53 ஆண்டுகாலம் கட்சியில் மூத்த நிர்வாகியாக இருந்த செங்கோட்டையனுக்கு தெரியாதா.?
பொதுக்குழு எடுத்த முடிவுக்கு எதிராக செயல்பட்டதால் நடவடிக்கைநான் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவல்ல மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி சட்ட திட்ட விதிகளின் படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஜெ. வால் நீக்கப்பபடவர். நான் முதலமைச்சர் ஆன பிறகுதான் அவரை அமைச்சர் ஆக்கினேன்.
டிடிவி தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்,
ஜெ. உயிரோட இருந்த 10 ஆண்டு காலம் சென்னைக்கே வரவில்லை தினகரன் , வந்தாலும் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பார்.
ஜெ. மறைந்த பிறகு சசிகலாவால் நேரடியாக துணைப் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டார் டிடிவி தினகரன்.
ஜெ. உயிரோடு இருந்த 10 ஆண்டுகள் வனவாசம் சென்று விட்ட தினகரன் இன்று எங்களை பற்றி பேசுகிறார். கட்சிக்கு விசுவாசமாக இருப்பதால் நிர்வாகிகள் எனக்கு இந்த பொறுப்பை கொடுத்துள்ளனர்.
திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சட்டமன்றத்திலோ , பொதுக்கூட்டத்திலோ செங்கோட்டையன் பேசியது கிடையாது
கட்சிக்காக உழைக்காமல் துரோகம் இழைத்தால் இந்த நிலைதான் ஏற்படும்.
செங்கோட்டையன் நீக்கத்தால் அவரது தொகுதியில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர். அதிமுக தலைமைக்கு விரோதமாக செயல்பட்டாதல் தலைமைக் கழகம் வேடிக்கை பார்க்காது.
ஜெ.மறைவுக்கு பின் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கொடுத்தும் கட்சிக்கு உண்மையாக செயல்படவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தை ஆட்களை அழைத்து சென்று அடித்து உடைத்தார்.
உட்கட்சி பிரச்சனை வந்தபோது ஜெயலலிதா மறியல்தான் செய்தார் , கட்சி அலுவலகத்தை தாக்கவில்லை.
திமுகவை ஆட்சியில் அமர்த்த மறைமுகமாக திட்டமிட்டோர் இப்போது வெளிப்பட்டுள்ளனர். ஜெயலலிதா வால் நீக்கப்பட்ட தினகரனுக்கு அதமுக குறித்து பேச எவ்வித அருகதையும் இல்லை.
2026 தேர்தலில் திமுகவின் பி டீமாக செயல்பட திட்டமிட்டுள்ளனர். குற்றவாளி சசிகலா என தனது வலைதள பக்கத்தில் முன்னர் பதிவிட்டவர் பன்னீர் செல்வம்.
ஜெயலலிதா வே 2014 ல் செங்கோட்டையனின் பதவியை பறித்து விட்ட நிலையில் அவருக்கு எப்படி 2 முறை தலைமைப் பதவி கிடைக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். தனது தொகுதியில் சிற்றரசர் போல செயல்பட்டு வந்தார் செங்கோட்டையன் என்றார்.
நான் தற்காலிக பொதுச்செயலாளரா அல்லது நிரந்தர பொதுச்செயலாளரா என அனைவருக்கும் தெரியும். முறையான தேர்தல் மூலம் பொதுச்செயலாளரா ஆகியுள்ளேன் என்றார்.
ஓராண்டுக்கு முன்பே ஸ்டாலினை திமுக தலைமை அலுவலகத்தில் 20 நிமிடம் சந்தித்து பேசியுள்ளார் செங்கோட்டையன்.
கடந்த ஓராண்டுகாலமாக செங்கோட்டையனின் செயல்பாடு சரியில்லாமல் இருந்தது என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ