இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஹிஸ்ட்ரியை (Watch History) பார்ப்பது எப்படி?
சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.) இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான ரீல்ஸைப் பார்த்துவிட்டு, அதைச் சேமிக்க மறந்துவிவிட்டீர்களா?. அப்படியானால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் பார்த்த அனைத்து ரீல்ஸ்களையும் மீண்டும் பார்க்க உதவும் வகையில், இன்ஸ்டாகிராம் அ
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஹிஸ்ட்ரியை (Watch History) பார்ப்பது எப்படி?


சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.)

இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான ரீல்ஸைப் பார்த்துவிட்டு, அதைச் சேமிக்க மறந்துவிவிட்டீர்களா?. அப்படியானால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் பார்த்த அனைத்து ரீல்ஸ்களையும் மீண்டும் பார்க்க உதவும் வகையில், இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக 'பார்த்த வரலாறு' (Watch History) என்ற அம்சத்தைத் தொடங்கியுள்ளது. அந்த ஒரு ரீலைத் தேடி இனி மணிக்கணக்கில் ஸ்க்ரோல் செய்யத் தேவையில்லை.

இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்...

ரீல்ஸ் பார்த்த வரலாற்றைக் கண்டறியும் வழிமுறைகள்:

இன்ஸ்டாகிராம் செயலியைத் திறந்து, செயலியின் கீழ் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவர ஐகானைத் (Profile icon) கிளிக் செய்யவும். இது உங்கள் தனிப்பட்ட பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

உங்கள் புரொபைல் பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகளைத் தட்டவும். தோன்றும் மெனுவிலிருந்து 'Settings and Privacy என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கீழே ஸ்க்ரோல் செய்து, Your Activity என்பதை கிளிக் செய்யவும். இதில் நீங்கள் செலவழித்த நேரம், மற்றவர்களுடன் தொடர்பு கொண்டவை மற்றும் சமீபத்தில் பார்த்த கன்டென்டுகள் போன்றவை கண்காணிக்கப்படும்.

Watch History பிரிவின் கீழ், இப்போது புதிய விருப்பமாக Watch History என்பதைக் காண்பீர்கள். அதைத் தட்டினால், உங்கள் கணக்கில் நீங்கள் பார்த்த அனைத்து ரீல்ஸ்களின் பட்டியலையும் பார்க்க முடியும்.

இன்ஸ்டாகிராம் உங்கள் Watch History -ஐ பல வழிகளில் வரிசைப்படுத்த அனுமதிக்கிறது:

இன்று, இந்த வாரம் அல்லது ஒரு குறிப்பிட்ட தேதி வரம்பிற்குள் நீங்கள் பார்த்த ரீல்ஸ்களைப் பார்க்கலாம்.

காலவரிசைப்படியோ அல்லது தலைகீழ் வரிசைப்படியோ வரிசைப்படுத்தலாம்.

ரீல்ஸ்களை உருவாக்கியவரின் அடிப்படையில் குழுவாகப் பார்க்கலாம்.

நீங்கள் சேமிக்க விரும்பாத தனிப்பட்ட ரீல்ஸ்களை உங்கள் பார்த்த வரலாற்றிலிருந்து நீக்கவும் முடியும்.

இந்த அம்சம் ஏன் முக்கியம்?

இந்த 'Watch History' அம்சம், இன்ஸ்டாகிராம் பயனர்களால் அதிகம் கோரப்பட்ட ஒன்றாகும். இந்த அம்சம் வரும் வரை, மிஸ் செய்த ரீல்ஸ்களைக் கண்டுபிடிக்க உங்கள் டேட்டாவை செயலியில் இருந்து பதிவிறக்கம் செய்து, மேனுவலாக தேட வேண்டியிருந்தது.

இப்போது, இந்த புதிய அம்சத்தின் மூலம், நீங்கள் முன்பு பார்த்த, சேமித்த அல்லது தற்செயலாகத் கடந்த வீடியோக்களை உடனடியாக மீட்டெடுக்க முடியும்.

புதிய ரீல்ஸ் அம்சங்கள்

இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் அனுபவத்தை மேம்படுத்த டிக்டாக் பாணியிலான அம்சங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே இருக்கிறது.

நீண்ட கதைகளைச் சொல்ல பல ரீல்ஸ்களைத் தொடராக இணைக்கலாம். Picture-in-Picture - PiP mode பயன்முறையைப் பயன்படுத்தலாம்.

Watch History அம்சம் இப்போது பயன்பாட்டில் இருப்பதால், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒரு சில கிளிக்குகளில் உங்களுக்குப் பிடித்த ஷார்ட்ஸ் வீடியோக்களைக் கண்டறியவும், மீண்டும் பார்க்கவும், நிர்வகிக்கவும் மிகவும் யூசர் நட்பு அம்சமாக மாறியுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM