நவ.5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு ஒத்திவைப்பு
சென்னை, 1 நவம்பர் (ஹி.ச) ஆண்டுதோறும் 2 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெறும். அப்போது அரசின் நலத்திட்டங்கள், சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாட்டில் முதல
நவ.5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு ஒத்திவைப்பு


சென்னை, 1 நவம்பர் (ஹி.ச)

ஆண்டுதோறும் 2 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெறும்.

அப்போது அரசின் நலத்திட்டங்கள், சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த மாநாட்டில் முதல்வர் அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்குவார்.

இந்நிலையில் வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் சென்னையில் உள்ள தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் நவ.5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு நிலவரம், திட்ட செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெற இருந்தது.

மீண்டும் மாநாடு நடத்தப்படும் தேதி நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b