Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 1 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் அமைக்கப்பட்டுள்ள இணையத் தொழிலாளர்கள் கூடத்தை எம்பி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாநகராட்சி பகுதியில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள இணையத் தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் தனி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக காந்திபுரம் நகர பேருந்து நிலையம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
காந்திபுரம் பகுதியில் 16.82 லட்சம் மதிப்பில் இருக்கை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதியுடன் அமைக்கப்பட்ட இந்த கூடத்தை கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து தொழிலளர்களுடன் கலந்துரையாடினர்.
இது குறித்து பேட்டியளித்த எம்பி கணபதி ராஜ்குமார்,
இணைய தொழிலாளர்கள வசதிகாக கோவை மாநகராட்சியில் 7 இடங்களில் இந்த கூடங்கள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இன்று காந்திபுரம் பகுதியிலும் நாளை ஆர்.எஸ்.புரம் பகுதியிலும் இந்த திறந்து வைப்பதாக கூறினார்.
ஆட்டோர் ஓட்டுனர்களும் இது போன்ற கூடங்கள் வேண்டுமென்று கேட்டுவருவது குறித்தான கேள்விக்கு வாய்ப்பிருந்தால் நிச்சயம் ஏற்பாடு செய்யலாம் என்றார்.
Hindusthan Samachar / V.srini Vasan