Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 1 நவம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த நாள் நவம்பர் 1-ம் தேதி ஆகும். இந்தச் சிறப்புமிக்க நாளை இன்றளவும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பொன்னாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை வென்று காட்டியவர், “குமரியின் தந்தை” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மார்ஷல் ஏ.நேசமணி ஆவார்.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள் ஆன இன்று (01-11-2025) வேப்பமூடு சந்திப்பில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் திரு உருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Hindusthan Samachar / vidya.b