புதுச்சேரி விடுதலை நாள் விழா -  புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் தேசிய கொடி ஏற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்
காரைக்கால், 1 நவம்பர் (ஹி.ச.) புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரஞ்சு இந்திய பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 4 பிராந்தியங்கள் இந்தியாவுடன் இணைந்த நாளான இன்று புதுச்சேரி விடுதலை நாளாக புதுச்சேரி அரசு அறிவித்தது. இதனை அடுத்து புதுச்சேரி
Puducherry


காரைக்கால், 1 நவம்பர் (ஹி.ச.)

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரஞ்சு இந்திய பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 4 பிராந்தியங்கள் இந்தியாவுடன் இணைந்த நாளான இன்று புதுச்சேரி விடுதலை நாளாக புதுச்சேரி அரசு அறிவித்தது.

இதனை அடுத்து புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு காரைக்கால் கடற்கரை சாலையில் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் தேசிய கொடியேற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விடுதலை நாள் விழா முன்னிட்டு குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் தொடர்ந்து காவல்துறையினர், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

புதுச்சேரி விடுதலை நாள் முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அமைச்சர் திருமுருகன், ஆட்சியர் மணிகண்டன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Hindusthan Samachar / Durai.J