தூத்துக்குடியில் ரயில்வே தபால் நிலையம் இன்று முதல் முழு நேரம் இயங்கும் - அஞ்சல்துறை அறிவிப்பு
தூத்துக்குடி, 1 நவம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையத்தில் மாலை 6 மணி முதல் பார்சல்கள் மற்றும் விரைவுத்தபால் அனுப்பும் வசதி செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தூத
தூத்துக்குடியில் ரயில்வே தபால் நிலையம் இன்று முதல் முழு நேரம் இயங்கும் - அஞ்சல்துறை அறிவிப்பு


தூத்துக்குடி, 1 நவம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையத்தில் மாலை 6 மணி முதல் பார்சல்கள் மற்றும் விரைவுத்தபால் அனுப்பும் வசதி செயல்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தூத்துக்குடி ரயில் நிலைய வளாகத்தில் இந்த ரயில்வே தபால் நிலையம் தற்போது 24×7 மணி நேர தபால் பதிவு (புக்கிங்) சேவையாக இன்று (நவ.1) முதல் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் 24×7 மணி நேர தபால் பதிவு (புக்கிங்) சேவையை பெற ரயில்வே தபால் நிலையத்தை அணுகலாம் என்று அஞ்சல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b