Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 1 நவம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் நொச்சிவயல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரவிக்குமாரை ராமகிருஷ்ணன் கத்தியால் குத்தி கொலை செய்தார். ராமகிருஷ்ணனை ராமநாதபுரம் பஜார் போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கு இராமநாதபுரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN